June 2

June 2

 கண்ணீரின் அன்னை மரியாள்

போன்டே நோஸா, இத்தாலி (1511)

 

1511-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி அன்று, ஆடுமேய்க்கும் ஒரு பெண் அன்னை மரியாளின் திருவுருவத்தை பக்தியோடு உற்றுநோக்கிக் கொண்டிருந்தபோது, அன்னையின் முகம் மாறுவதையும், அவரது கண்ணிமைகள் திறந்துமூடி இரத்தம் கண்ணீராக வடிவதையும் கண்டதாக பாரம்பரிய வரலாறு கூறுகிறது. இந்த அற்புத நிகழ்வை பார்ப்பதற்காக மக்களை ஆலயத்திற்கு அழைத்துவருமாறும் புதிய தேவாலயம் ஒன்றை இங்கு கட்டவேண்டும் என்றும் ஒரு குரலொலியை அப்பெண் கேட்டார். இந்த பெண்ணின் சாட்சியமானது, எழுத்துபூர்வமாக பதிவுசெய்யப்பட்டு உறுதிப்படுத்தும் அலுவலரால் அத்தாட்சியிடப்பட்டது. ஏற்கனவே இருந்த விண்ணேற்பு அன்னைக்கு அர்ச்சிக்கப்பட்ட ஆலயத்தையொட்டி, அன்னையின் திருவுருவத்தை வைப்பதற்கான புதிய ஆலய கட்டுமானப் பணிகள் 1525-ம் ஆண்டு தொடங்கி 1533-ல் முடிக்கப்பட்டது. 1575-ம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்ட புதிய ஆலயம், ப்ரீமோலோ என்ற பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 1583-ம் ஆண்டில் தனி பங்குதளமாக உயர்த்தப்பட்டது. அன்னை மரியாள் கண்ணீர் வடித்த திருவுருவச்சுரூபம் வைக்கப்பட்டிருந்த இடம் ஆலயத்தின் ஒருபகுதியில் தனி பீடத்துடன் கட்டப்பட்டிருந்தது. புதிய சக்ரிஸ்து அறைக்கு இடம் வேண்டும் என்பதற்காக 1716-ம் ஆண்டு பழைய ஆலயம் இடிக்கப்பட்டது.

0 Comments :

 
Copyright © 2015. Ave Maria Store
Blogger Templates